நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சின்ன ஓங்காளியம்மன் திருக்கோவிலில் இன்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் அம்மனுக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.