திருச்செங்கோடு: பள்ளி மாணவி கர்ப்பம் - சக மாணவன் கைது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 15 வயது 10ஆம் வகுப்பு மாணவி 3 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அதே வகுப்பில் படிக்கும் மாணவன் தான் சிறுமியின் கர்ப்பத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருச்செங்கோடு மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் அந்த மாணவனை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி