எலச்சிபாளையம் ஒன்றியத்தில் முதலமைச்சர் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் குருக்கபுரம் முதல் புள்ளாச்சிப்பட்டி வரை ரூ.37.83 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.எஸ். மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.