திருச்செங்கோடு சுற்றுவட்டச் சாலை: எம்எல்ஏ ஆய்வு

திருச்செங்கோடு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்ட சுற்றுவட்டச் சாலைகளை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்செங்கோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ. 238 கோடி மதிப்பீட்டில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றன. 

12.8 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தச் சாலை தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. சாலைப் பணிகள், தரம், நீள அகல ஆழம் ஆகியவற்றை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆய்வு செய்தார். ஆய்வில் ஆங்காங்கு தென்பட்ட சிறு குறைகளை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி சீர் செய்ய அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி