நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 1, 7, 8 பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், மாங்கொட்டைப் பாளையம் பகுதியில் பொதுக் கழிப்பிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன், நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.