நீண்ட நாள்களாகியும் பணத்தைத் திருப்பி தராததால், முருகன் அளித்த கசோலையை ஆதாரமாக வைத்து திருச்செங்கோடு விரைவு நீதிமன்றத்தில் நரேந்தா் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணையின்போது முருகன் ஆஜராகாததால், 2020 மாா்ச் 30 இல் பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பிறகு முருகன் தலைமறைவாக இருந்துவந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், முருகனுக்கு ஓராண்டு சிறையும், ரூ. 7 லட்சம் அபராதமும் விதித்து அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
அபராதத்தைச் செலுத்த தவறும்பட்சத்தில் தண்டனைக் காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படும் எனத் தீா்ப்பளித்தது.