நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறுகையில்:இதுவரை நம்மை வாட்டிய வேதனைகளும், துன்பங்களும் விலகி மகிழ்ச்சி தருகின்ற நல்லவைகள் நடக்க வேண்டுமென்று ஆண்டவனை வேண்டி பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். குறிப்பாக விவசாயிகளுக்கு பால் விலை உயர்வும், கள் இறக்க அனுமதியும் கிடைத்து பொற்காலமாக வருகிற காலம் மலர வேண்டுமென்று வேண்டி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.