நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு நெசவாளர் காலனி சமுதாய கூடத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கமிட்டியினர் மற்றும் கோவை தனியார் மருத்துவமனை, ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமினை, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ. ஆர். ஈஸ்வரன் துவக்கி வைத்தார். இம்முகாமில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர்.