நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நூற்றாண்டு விழா பணிகள் துவக்கு விழா நடைபெற்றது. ஜி எல் கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் ஏபிஜே அப்துல் கலாம் கட்டிட பணி புனரமைப்பு செய்யப்பட்டது. இந்த விழாவில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.