திருச்செங்கோடு: மூதாட்டி தலையில் கல்லைப்போட்டு படுகொலை; தம்பதி கைது

திருச்செங்கோடு அருகே ரத்தினம்மாள் (90) என்ற மூதாட்டியை, வீட்டை வாடகைக்கு எடுத்த ராமஜெயம் என்பவர் மதுபோதையில் தாக்கி கொலை செய்துள்ளார். மூதாட்டி கண்டித்ததால் ஆத்திரமடைந்த ராமஜெயம், அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்துவிட்டு, மூதாட்டியின் செல்போன், அரை பவுன் கம்மலை திருடி தப்பியோடியுள்ளார். 24 மணி நேரத்திற்குள் ராமஜெயத்தை கைது செய்தனர். கொலை, நகைப்பறிப்பு வழக்குகளில் ராமஜெயம் மீதும், நகையை விற்க உதவியதாக அவரது மனைவி செல்வி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி