திருச்செங்கோடு: ரூ. 82 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர கொப்பரை ஏலத்தில் முதல்தர கொப்பரை கிலோ ரூ. 192க்கு விற்கப்பட்டது. மொத்தம் 16 மூட்டை கொப்பரைகள் ஏலத்துக்கு வந்தன. இதில் முதல்தர கொப்பரை கிலோ ரூ. 170. 10 முதல் ரூ. 192 வரையிலும், இரண்டாம் தரம் ரூ. 80. 50 முதல் ரூ. 121 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ. 82 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி