கொமதேக கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் தேர் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கல்லூரி மாணவர் ஹர்ஷவர்தன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும், அதேபோல் படுகாயம் அடைந்த மாணவன் சஷ்டிகன் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். படுகாயம் அடைந்த மாணவனுக்கு உயர்தர சிகிச்சை அளித்து குணமடைய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.