திருச்செங்கோடு தேர் திருவிழா மண்டபக்கட்டளை நிறைவு

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் தேர் திருவிழா மண்டபக்கட்டளைகள் நிறைவு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவில் மண்டபக்கட்டளைகள் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. 

பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் தேர்த்திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த மூன்று நாள்களாக அர்த்தநாரீசுவரர் தேர் வடம்பிடிக்கப்பட்டு நான்கு ரதவீதிகளில் வலம் வந்து வியாழக்கிழமை நிலை சேர்க்கப்பட்டது. மாலை ஆதிகேசவப் பெருமாள் தேர் வடம்பிடிக்கப்பட்டது. 

வெள்ளிக்கிழமை மண்டபக்கட்டளைகளின் நிறைவு நாளில் கொல்லமுத்து நாயக்கர் மண்டப கட்டளை, பத்திரகாளி அம்மன் கோயில் தீபாராதனை மண்டபக்கட்டளை, நெய்க்காரப்பட்டி கவுண்டர்கள் மண்டபக்கட்டளை, நெசவாளர் காலனி மாரியம்மன் கோயில் கட்டளை, குஞ்சு மாரியம்மன் கோயில் கட்டளை, கொங்கு எழுகரை நாடு ஆதி திராவிடர்கள் மண்டபக்கட்டளை, திருச்செங்கோடு நகர குலாலர்கள் மண்டபக்கட்டளை, சர்க்கார் நந்தவனக் கட்டளைகளில் அர்த்தநாரீசுவரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிசேகங்கள் பூஜைகள் தீபாரதனை நடைபெற்றது. 

தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வசந்தோற்சவம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி