திருச்செங்கோட்டில், மதுபோதைக்கு அடிமையான ரமேஷ்குமாா் (30) சனிக்கிழமை தனது பாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். போதை பழக்கத்தால் வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த நிலையில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து திருச்செங்கோடு நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.