நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான காப்பர் ஒயர்களை திருடிய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். மூன்று நாட்களாக நள்ளிரவில் இந்த திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொலிரோ கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.