திருச்செங்கோட்டில்: 4 வாகனங்கள் பறிமுதல்.. ரூ.52,000 அபராதம்

திருச்செங்கோட்டில், முறைகேடாக இயக்கிய வாகனம் உள்பட 4 வாகனங்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் மோகனப்பிரியா மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் திருச்செங்கோட்டில் இருந்து தேவனாங்குறிச்சி செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தகுதிச்சான்று புதுப்பிக்காத 3 வாகனங்கள் மற்றும் தனியார் பயன்பாட்டு கார் ஒன்று வாடகை பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதால் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. மேலும், வாகன சோதனையில் ரூ. 52,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி