நாமக்கல் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை காவலர் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகநாயினார் தலைமையில் போலீசார் திருச்செங்கோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த டிரைவர் வீரகுமார் (46), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த உபா ஹரிஜன் (26), சனபத் பத்ரா (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.