திருச்செங்கோடு: 15 மூட்டை கொப்பரை ரூ. 68, 400 விற்பனை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள மல்லசமுத்திரம் கிளையில் இன்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் மொத்தம் 15 மூட்டை கொப்பரை தேங்காய் ஏலத்திற்கு வந்தது. முதல் தர கொப்பரை தேங்காய் ரூ. 120 முதல் ரூ. 180 வரையிலும், இரண்டாம் தர கொப்பரை தேங்காய் ரூ. 85.99 முதல் ரூ. 115.10 வரையிலும் விற்பனை ஆனது. மொத்தம் 15 மூட்டை கொப்பரை தேங்காய் ரூ. 68,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி