வையப்பமலை அருகே பிரதோஷ சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் மாவட்டம் வையப்பமலை அருகே உள்ள பொன்குறிச்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அன்னபூரணி அம்மாள் சமேத இராஜராஜேஸ்வரர் கோவிலில், இன்று சனி பிரதோஷத்தையொட்டிச் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் நந்தி பகவானுக்குப் பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி