வையப்பமலை அருகே அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம்

நாமக்கல் மாவட்டம் வையப்பமலை அருகே எஸ். நாட்டமங்கலத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் மற்றும் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனை காட்டப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி