வையப்பமலை அருகே அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம்

நாமக்கல் மாவட்டம் வையப்பமலை அருகே எஸ். நாட்டாமங்கலம் அருள்மிகு ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று (நவ. 22) சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மஞ்சள் காப்பு மற்றும் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி