திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி முன்னிலை வகித்தார். வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் 15 வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 92,510 எண்ணிக்கையில் பயறு வகை, காய்கறி மற்றும் பழத்தொகுப்புகளை அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கினார்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி