திருச்செங்கோட்டில் ஜவுளிக் கடைகளில் ரூ. 8.60 லட்சம் திருட்டு

திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே வடக்கு ரத வீதியில் உள்ள ஜவுளிக் கடைகளில் புதன்கிழமை காலை ஊழியர்கள் திறந்தபோது, பணம் வைத்திருந்த அலமாரிகள் சிதறிக் கிடந்தன. வெண்டிலேட்டர் பகுதியில் ஓட்டை போட்டு மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. புகாரின்பேரில் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டதில், ஒரு கடையில் ரூ. 5 லட்சத்து 80 ஆயிரமும், மற்றொரு கடையில் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரமும் ரொக்கமாக திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி