நாமக்கல் மேற்கு மாவட்டம், மோகனூர் ஒன்றியத்தில் முதலமைச்சர் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் தோப்பூர் எஸ். வாழவந்தி முதல் நொச்சிப்பட்டி வரை ரூபாய் 76.87 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கே. எஸ். மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மோகனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் சிவா, அரசுத்துறை அலுவலர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.