ராசிபுரம்: தறித்தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

புதுச்சத்திரம் அடுத்த குருசாமிபாளையத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (27), தொழிலாளி. இவரது நண்பர் பிரபு, இருவரும் குருசாமிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம், மது அருந்தி விட்டு வெளியே வந்தனர். 

அப்போது, ராசிபுரம் அடுத்த அணைப்பாளையத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் நேரு (25), அவரது நண்பர் வேலு (29) ஆகியோர், மது அருந்திவிட்டு அங்கே நின்று கொண்டிருந்தனர். அப்போது பிரபுவிடம் இருவரும் தகராறு செய்தனர். அதனைத் தடுக்க முயன்ற மோகன்ராஜை ஆத்திரமடைந்த நேரு, வேலு சேர்ந்து, சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். 

இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப் பதிவு செய்து, நேரு, வேலு ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி