இந்தப் பிரச்சினையைப் போக்க திருச்செங்கோடு நகராட்சி நிர்வாகம் சார்பில் மேட்டுப்பகுதியான மாங்குட்டைப்பாளையத்திலிருந்து சண்முகபுரம், தொண்டிகரடு வழியாக சமதளப் பகுதியான சூரியம்பாளையம் வரை மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 3 மாதமாக பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் பணிகள் முடிவுற்றுள்ளன.
இந்நிலையில் சூரியம்பாளையத்தில் புதன்கிழமை 12 மி.மீ. மழை பெய்தது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சூரியம்பாளையத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள் சூரியம்பாளையத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால் என்ற பெயரில் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதாகவும், இந்தப் பகுதியில் வாய்க்கால் அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் எனவும் கூறி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கழிவுநீருடன் தேவையற்ற பொருள்களும் வருவதால் இந்த வாய்க்காலை வேறு பகுதியில் அமைக்கக் கோரி ஆனங்கூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.