இதனால், சந்தேகமடைந்த பெற்றோர், பக்கத்து வீட்டு சிறுவனை தொடர்புகொண்டு வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளனர். சிறுவன் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு தாழிடப்பட்டிருப்பது தெரியவந்தது. நீண்டநேரமாக கதவைத் தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து வீட்டிற்கு வந்து கதவை உடைத்து பார்த்த போது, தீபிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மல்லசமுத்திரம் போலீசார், மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி நடத்திய முதல்கட்ட விசாரணையில், 10ஆம் வகுப்புத் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.