திருச்செங்கோடு கூட்டப்பள்ளி ஏரிப் பகுதியில் அமைச்சர் கே. ஜி. அருண்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். ஏரியில் நீர் மாசுபாடு மற்றும் குப்பைகளை அகற்றுவது குறித்தும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கான்கிரீட் அமைத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாமல் மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.