கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்த விஜயகுமார், காளிப்பட்டி கந்தசாமி கோயில் திருவிழாவில் அழகுசாதனப் பொருள் கடை அமைத்திருந்தார். கடை மூடப்பட்ட நிலையில், மருளையாம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக், தினேஷ், பூவரசன், ஆகாஷ் ஆகிய நால்வர் பொருள்களைக் கேட்டு தகராறு செய்து, விஜயகுமாரைத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து நால்வரையும் கைது செய்து, திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.