மல்லசமுத்திரம்: 114 மூட்டை பருத்தி ரூ. 2. 89 லட்சம் விற்பனை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து 114 மூட்டை பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்தனர். பி. டி. ரகம் குவிண்டால் ரூ. 5219 முதல் ரூ. 7641 வரையும், கொட்டு பருத்தி ரூ. 3700 முதல் ரூ. 4419 வரை ஏலம் போனது. மொத்தம் 114 மூட்டை பருத்தி ரூ. 2.89 லட்சத்திற்கு விற்பனையானது.

தொடர்புடைய செய்தி