நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில், பக்தர்களின் நலன் கருதி ரோப் கார் அமைப்பதற்கான இடம் குறித்து திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர். சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.