நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த கருமாபுரம் ஊராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் உடன் அங்கன்வாடி மைய ஆசிரியர், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.