காளிப்பட்டி: 1. 3 டன் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், திருச்செங்கோடு அருகே காளிப்பட்டி பிரிவில், வாகன தணிக்கை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது தலா 60 கிலோ எடை கொண்ட 23 சாக்கு மூட்டைகளில், மொத்தம் 1, 380 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ரேஷன் அரிசியை கடத்தி சென்ற, சேலம் அழகாபுரம் புதூரை சேர்ந்த சதீஷ்குமார் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி