கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்கள் தூக்கிவந்த நிலையில், நிகழாண்டு முதல் முறையாக பெண்கள் கலந்துகொண்டு 47 கிலோ, 67 கிலோ எடை கொண்ட கற்களை வைத்து இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. 47 கிலோ கல்லை பெண்கள் பலர் சர்வசாதாரணமாக தூக்கியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஐந்து பெண்கள் மட்டுமே 67 கிலோ எடை கொண்ட இளவட்டக் கல்லை தூக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த பவதாரணி என்ற இளம்பெண் இரண்டு முறை 67 கிலோ எடை கொண்ட இளவட்டக் கல்லை தூக்கி முதல் பரிசை வென்றார்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு