நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலான கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மதியம் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.