நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு SCPAR திட்டத்தின் மூலம் ரூபாய் 4,54,00,000 மதிப்பீட்டில் மலைப்பாதை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் பழனிவேல், பேரூர் செயலாளர் திருமலை, திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.