நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில், அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு 2,120 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ், முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி, கட்சி நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவியர் பலர் கலந்துகொண்டனர்.