திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் வைகாசி விசாகத் தேர்த் திருவிழா அர்த்தநாரீசுவரர், செங்கோட்டுவேலவர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மலைக்கோயிலில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீசுவரர் நகருக்கு எழுந்தருளி திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா 14 நாள்கள் நடைபெறவுள்ளது. அர்த்தநாரீசுவரர் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜைகள் நடத்தி கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.