நாமக்கல்: பஸ் மீது, இருசக்கர வாகனம் மோதி விபத்து; ஒருவர் பலி

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் கிழக்குப்பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பெரியண்ணன் (48), பெயிண்டர். இவர் நேற்று எலச்சிபாளையத்திற்கு பணிக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை வீடு திரும்பினார். செட்டிக்குட்டைமேடு கிழக்குபாளையம் பிரிவு ரோடு அருகே வந்தபோது, திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்ற தனியார் பஸ் மீது, இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பெரியண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த எலச்சிபாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி