எலச்சிபாளையம்: சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பாவாயி (65) என்ற பெண் உயிரிழந்தார். அவரது உறவினர் ராமசாமிக்கு (75) காலில் முறிவு ஏற்பட்டது. ஈரோட்டில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்த கார் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி