வையப்பமலையில் சிபிஎம் கட்சியினர் பிரச்சார இயக்கம்

திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிழக்கு ஒன்றிய குழு சார்பில் தமிழகம் தழுவிய மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள் தலைமை வகித்தார். 

கட்சி பொறுப்பாளர்கள் தமிழ்மணி, சுரேஷ், தேவராஜன், ரமேஷ் முன்னிலை வகித்து பேசினர். பிரச்சாரத்தில், வையப்பமலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனை சரிசெய்ய வேண்டும். சாக்கடை கழிவுநீர் கால்வாய்களை பல மாதங்களாக சுத்தம் செய்யாமல் உள்ளது அதை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். வையப்பமலை அரசு மருத்துவமனையில் முறையாக மருத்துவம் பார்க்க வேண்டும்.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் சம்பள பாக்கி இல்லாமல் முழுமையாக வேலை வழங்க வேண்டும். சிறு குறு தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி