திருச்செங்கோட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆலோசனை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், சுகாதாரத் துறை அமைச்சர் கே. ஜி. அருண்ராஜ் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்த இந்தக் கூட்டத்தில், நாமக்கல் மக்களவை உறுப்பினர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஏரிகள் புனரமைப்பு, காவிரி - திருமணி முத்தாறு, பொன்னியாறு இணைப்பு திட்டங்கள் குறித்து அமைச்சர் அலுவலர்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி