திருச்செங்கோடு டிசிஎம்எஸ் சங்கத்துக்கு விருது

நாமக்கல் மாவட்டத்தில், 72-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் சிறந்த கூட்டுறவு விற்பனைச் சங்கமாகத் தோ்வுசெய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த விழாவில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் ராஜேஷ்குமாா் எம். பி. தலைமை வகித்தாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மதிவேந்தன் முன்னிலை வகித்து விருதுகளை வழங்கினாா்.

தொடர்புடைய செய்தி