திருச்செங்கோட்டில் அதிமுக சார்பாக ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி பேசுகையில், அதிமுக அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும், கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டதாகவும், ஆனால் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் கூறினார். வரும் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி