நாமக்கல்: +2 தோ்வில் வித்யா விகாஸ் பள்ளி மாணவி சாதனை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள வித்யா விகாஸ் பள்ளி மாணவி பிளஸ் 2 தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இப்பள்ளி மாணவி எஸ். ஐஸ்வர்யா 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் வேதியியல், கணினி அறிவியலில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி ஏ. எஸ். மதிளா 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடமும், மாணவி எஸ். ராகவி 585 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை வித்யா விகாஸ் கல்வி நிறுவன மேலாண் அறங்காவலர்கள் எஸ். குணசேகரன், டி. ஓ. சிங்காரவேல், எஸ். ராமலிங்கம், எம். முத்துசாமி, வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் என். சீராளன், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி