திருச்செங்கோடு பகுதிகளில் தவெக செயல்வீரா்கள் கூட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், திருச்செங்கோடு ஒன்றியங்கள் மற்றும் திருச்செங்கோடு நகரம், மல்லசமுத்திரம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வெற்றிக் கழக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் அருண்ராஜ் பங்கேற்றார். வரவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு குறுகிய நாள்களே இருப்பதால், பொறுப்பாளா்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், மக்களை சந்தித்து தோ்தல் பரப்புரை செய்வது, தோ்தல் பணிமனைகள் அமைப்பது உள்ளிட்டவை குறித்தும் அவர் விளக்கி பேசினார்.

தொடர்புடைய செய்தி