விசாரணையின் அடிப்படையில் வட்டூர் பெத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த மாதேஷ், விழுப்புரம் மாவட்டம் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த முத்துவேல், விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் பகுதியை சேர்ந்த செந்தில், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், மற்றும் முரளி ஆகிய 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். இதில் வட்டூர் பெத்தாம்பட்டியை சேர்ந்த மாதேஷ் என்கிற மாதேஸ்வரன் தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டு பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து அப்பகுதிகளில் விற்று வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்பிரிட் 50 லிட்டரை கேன்களில் கொண்டு வந்து போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதுபானம் தயாரித்த குடோனில் இருந்து ஆல்கஹால் மீட்டர், 60 ஆயிரம் பாட்டில்கள், 40 ஆயிரம் மூடிகள் போலி லேபிள்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.