மல்லசமுத்திரம் பேரூராட்சியில் 200 தெருநாய்களுக்கு கருத்தடை

மல்லசமுத்திரம் பேரூராட்சியில் வெங்கடேசபுரி- ஏரிக்காடு, காளிப்பட்டி, போயா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்துக்கு புகாா் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, செயல் அலுவலா் மூவேந்திர பாண்டியன் உத்தரவின் பேரில், தெருநாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி