நாமக்கல்: தென்னை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சேலம் மாவட்டம், மேட்டூா் வட்டம் பெரிய சோரகை வைரம் தெருவைச் சோ்ந்த பழனிசாமி மகன் கிருஷ்ணராஜ் (26), மரம் ஏறும் தொழிலாளி. கடந்த 13 ஆம் தேதி மல்லசமுத்திரம் வட்டூரில் உள்ள ஒரு தென்னந்தோட்டத்தில் தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறியபோது அவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டு மரத்தில் இருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு திங்கள்கிழமை அவா் இறந்தாா். இந்த சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி