எருமப்பட்டி அருகே மூவர் தற்கொலை வழக்கில் பெண் கைது

எருமப்பட்டி ஒன்றியம், அ. வாழவந்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (55), கூலித்தொழிலாளி. இவருக்கு பூங்கொடி (50) என்ற மனைவி, சுரேந்திரன் (25) என்ற மகனும் உள்ளனர். கடந்த 14ம் தேதி மூவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். சம்பவம் தொடர்பாக எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுரேந்திரன் மனைவி சினேகா தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தி தகராறில் ஈடுபட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி மூவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இதையடுத்து சினேகாவை எருமப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் மூவரின் இறப்பிலும் சந்தேகம் இருப்பதாக சேந்தமங்கலம் முத்துக்காப்பட்டியைச் சேர்ந்த பூங்கொடியின் தங்கை முத்துலட்சுமி என்பவர் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி